கோவை ரயில் நிலையம் பற்றிய முக்கிய தகவல்கள், கோவை ரயில் நிலையம் செல்லும் வழிகள், கோவை ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய ரயில்கள் நேரம், முக்கிய ரயில் நேரங்கள்.
கோவை ரயில் நிலையம் தமிழ்நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையம் ஆகும், கோவை ரயில் நிலையம் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுடன் ரயில் போக்குவரத்து வசதியை கொண்டுள்ளது, கோவை ரயில் நிலையம் 6 நடைமேடைகளை கொண்டுள்ளது, இங்கு இருந்து தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன, தினமும் 25000 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர், கோவை ரயில் நிலையம் சேலம் கோட்டத்தில் அமைந்துள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் அருகில் அமைந்துள்ள ரயில் நிலையங்கள்:
போத்தனுர் ரயில் நிலையம் 5 கிலோமீட்டர், இருகூர் ரயில் நிலையம் 10 கிலோமீட்டர், சிங்கநல்லூர் ரயில் நிலையம் 6 கிலோமீட்டர், வடகோவை ரயில் நிலையம் 3 கிலோமீட்டர், கிணத்துகடவு ரயில் நிலையம் 24 கிலோமீட்டர், சூலூர் ரோடு ரயில் நிலையம் 16 கிலோமீட்டர்.
முக்கிய ரயில்கள்:
+ கோவை ரயில் நிலையத்தில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கு தினமும் இரண்டு இன்டர் சிட்டி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
+ சென்னைக்கு இரவு நேர ராயில் சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன
+ மேலும் சென்னைக்கு ஒரு சதாப்தி ரயில் மற்றும் கோவை வழியாக கேரளா மாநிலத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் செல்கின்றன.
+ மன்னார்குடிக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ், கும்பகோணத்திட்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் இரவு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தென் மாவட்டத்திற்கு திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன.
+ மங்களூர் செல்ல இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் மற்றும் வெஸ்ட் காஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை மெயில், மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் என ஐந்து விரைவு தொடர்வண்டிகள் மற்றும் ஒரு பயணியர் மிதவேக வண்டி இயக்கப்படுகிறது.
+ டெல்லி மற்றும் மும்பை செல்ல தினமும் ரயில் வசதி உண்டு, ராஜ்கோட் மற்றும் ஜபல்பூர், ராமேஸ்வரம், ஜெய்ப்பூர் செல்ல வாரத்திட்கு ஒரு ரயில் சேவை உள்ளது,
+ மேலும் நகர்கோயில் செல்ல தினமும் ஒரு பயணிகள் ரயில், பொள்ளாச்சி செல்ல ஒரு ரயில் , பழனி செல்ல ஒரு ரயில், கேரளா மாநிலம் கண்ணூர் செல்ல ஒரு ரயில், ஈரோடு செல்ல ஒரு ரயில் , சேலம் பகல் நேர ரயில், திருச்சி செல்ல ஒரு ரயில், பாலக்காடு செல்ல 4 பயணிகள் ரயில், சோரனுர் செல்ல ஒரு ரயில், திருச்சூர் செல்ல ஒரு ரயில் என பல பயணிகள் ரயில் இந்த வழியாகவும் இங்கு இருந்தும் இயக்கப்படுகின்றன.
கோவை ரயில் நிலையம் பாரத ஸ்டேட் வங்கி ரோடில் அமைந்துள்ளது, உக்கடம் பேருந்து நிலையம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல 2 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது, மேலும் ola மற்றும் உபேர் கால் டாக்ஸி சேவை மற்றும் ஆட்டோ வசதி 24 மணி நேரமும் உள்ளது. கோவை ரயில் நிலையம் A+ தகுதி உடைய ரயில் நிலையம், தங்கும் அறை, உணவகம், டீ கடை அனைத்து நடை மேடைகளிலும் உள்ளது, மேலும் அருகில் முக்கிய உணவகங்கள், வங்கி ATM, பேருந்து நிலையம் மற்றும் சினிமா தியேட்டர் ஆகியவை அருகில் உள்ளன.
முக்கிய சுற்றுலா தளமான ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இங்கு இருந்து எளிதாக செல்ல இயலும், மேலும் மருதமலை முருகன் கோவில், பழனி முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், கோணியம்மான் ஆலயம் இங்கு இருந்து எளிதாக செல்லலாம்,
இந்தியாவின் முதல் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நகரத்திட்கு திங்கள் தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. மேலும் ஒரு சதாப்தி ரயில், ஒரு ஹம்சபார் ரயில், ஒரு அன்யோதய ரயில் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment