Here You can Get Tamilnadu State Transport Corporation TNSTC Bus Timings and News, Also SETC Timings and News Updates,

Breaking

Friday 4 January 2019

கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகள் செல்ல குறிப்புகள்

கோயம்புத்தூர் இரயில், கோயம்புத்தூர் இரயில் நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்கநல்லூர் பேருந்து நிலையம், வடகோவை பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்,
🚌
கோவை ரயில் நிலையம். தமிழ்நாட்டின் முக்கிய வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் தினமும் 25000 பயணிகள் வந்து செல்கின்றனர். கிட்டத்தட்ட 96 ரயில்கள் தினமும் கோவை வழியாக செல்கின்றன.
🚲
    அத்தகைய கோவை ரயில் நிலையத்திலிருந்து கோவை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் இடங்களுக்கு எவ்வாறு செல்வது என்பதை இங்கு பார்ப்போம்.
🚌🚍
காந்திபுரம்:
🚌
காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் SETC பேருந்து நிலையம் இங்கு உள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல கோவை ரயில் நிலையத்தில் முன் வாயில் வழியாக வெளியேறி இடது புறமாக 50 மீட்டர் தொலைவு நடந்தால் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு இருந்து பேருந்து என் 3 அல்லது காந்திபுரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த வழியாக செல்லும். கட்டணம் 7 ரூபாய். 10 நிமிடத்தில் காந்திபுரம் பேருந்து நிலையம் சென்றடையலாம். (காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களான கர்நாடகாவின் மைசூரு மற்றும் பெங்களூர் பேருந்து வசதி உண்டு. மேலும் சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் செல்ல பேருந்து வசதி உண்டு. இரவு நேரம் சென்னை செல்ல அதிக பேருந்து வசதி உண்டு. மேலும் தனியார் பேருந்து நிலையம் இங்கு உள்ளது, இங்கு இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்து செல்லும் மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவின் பெங்களூர் மற்றும் மைசூரு செல்ல பேருந்து உண்டு)
🚌
உக்கடம் பேருந்து நிலையம்:
🚌
உக்கடம் பேருந்து நிலையம் செல்ல கோவை ரயில் நிலையத்தில் முன் வாயில் வழியாக வெளியேறி முன்னாள் உள்ள சாலையை கடந்து 100 மீட்டர் தூரம் வடக்கு பக்கமாக செல்லவும், அங்கிருந்து பேருந்து என் 3 மற்றும் உக்கடம் செல்ல 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உண்டு. மேலும் இன்னொரு வழியாக, கோவை ரயில் நிலையத்தில் முன் வாயில் வழியாக வெளியேறி அருகில் உள்ள சாலையை கடந்து தெற்கு பக்கமாக 150 மீட்டர் சென்று கிழக்கு பக்கமாக சென்றால் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் கண்ணுக்கு தெரியும்படி அமைந்திருக்கும். அங்கு உள்ள சாலையை கடந்தால் பேருந்து என் 37, 77, 69, 30, 52 ஆகிய பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையம் செல்லும். கட்டணம் ரூபாய் 5. பயண நேரம் 10 நிமிடம். ( உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவின் பாலக்காடு செல்ல 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உள்ளது, மேலும் பொள்ளாச்சி, உடுமலை, பழனி செல்ல 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உள்ளது, மேலும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மதுரை, தேனி, கம்பம் செல்ல அடிக்கடி பேருந்து உள்ளது.)
🚌
சிங்கநல்லூர் பேருந்து நிலையம்:
🚌
கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் முன் வாயில் வழியாக வெளியேறி முன் உள்ள சாலையை கடந்து வலது பக்கமாக 150 மீட்டர் நடந்து செல்லவும், பின்னர் இடது பக்கமாக திரும்பி 150 மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் நீங்கள் அரசு மருத்துவமனை முன் செல்வீர்கள், அங்கு இருந்து பேருந்து என் 37, 77, 69, 30, 52, 75, 8 ஆகிய பேருந்துகளில் சென்றால் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் செல்லலாம். குறிப்பு: இங்கு இருந்து செல்லும் எந்த பேருந்தும் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் உள் செல்லாது. நீங்கள் சிங்கநல்லூர் சிக்னல் இறங்கி 150 மீட்டர் தூரம் இடது பக்கமாக நடந்து சென்றால் பேருந்து நிலையத்தை அடைவீர்கள். மற்றொரு வழியாக, கோவை ரயில் நிலையத்தில் முன் வாயில் வழியாக வெளியேறி சாலையை கடந்து இடது புறமாக 150 மீட்டர்  சென்றால் பேருந்து நிலையம் இருக்கும். அங்கு இருந்து 1சி என்ற பேருந்து மூலமாக சிங்கநல்லூர் செல்லலாம். இந்த பேருந்தும் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் உள் செல்லாது, 150 மீட்டர் மேட்கூறியபடி நடந்து செல்லவும்,  சிம்கநல்லூர் செல்ல பேருந்து கட்டணம் ரூபாய் 10. பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள். (சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. மேலும் கரூர், ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, உடுமலை, காங்கேயம், செல்ல நிறைய பேருந்து உள்ளன)
🚌
மேட்டுப்பாளையம் செல்ல:
🚌
மேட்டுப்பாளையம் செல்ல மேற்கூறியபடி காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் சென்று, அங்கு இருந்து மேட்டுப்பாளையம் செல்ல 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. மேட்டுப்பாளையம் செல்ல பேருந்து கட்டணம் ரூபாய் 24 . பயண நேரம் 45 நிமிடங்கள்.  மேட்டுப்பாளையம் சென்றால் அங்கு இருந்து ஊட்டி, குன்னுர், கூடலூர் செல்ல நெறைய பேருந்து உள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து முன் பக்க வாயில் வழியாக வெளியேறி இடது புறமாக சென்றால் 1சி பேருந்து வழியாக வடவள்ளி செல்லலாம் , அங்கு இருந்து மருதமலை முருகன் கோவில் செல்லலாம், பயண நேரம் 1 மணி நேரம்.

கோவை விமான நிலையம் செல்ல:

கோவை ரயில் நிலைய முன் புறத்தில் இருந்து வெளியேறி இடது புறமாக சென்று பேருந்து என் 90A மாற்றும் பேருந்து என் 2 இல் செல்லவும். பயண நேரம் 40 நிமிடங்கள். பேருந்து கட்டணம் 20 ரூபாய்.
🕌
கணுவாய் செல்ல:
🚌
ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி இடது புறமாக திரும்பி அருகில் உள்ள பேருந்து நிலையம் சென்றால் பேருந்து என் 11 கணுவாய் செல்லும். பயண நேரம் 40 நிமிடங்கள். கட்டணம் பேருந்து வகையை பொருந்து உள்ளது.

No comments:

Post a Comment

Pages