திருப்பூர் சந்திப்பு ரெயில் நிலையம் |
திருப்பூர் சந்திப்பு இரயில் நிலையம் | அடிப்படை வசதிகள், பயண குறிப்புகள் மற்றும் பல செய்திகள்
தென் இந்திய தொழில் நகரங்களில் முக்கிய நகரம் திருப்பூர் ஆகும். இங்கு தென் தமிழகத்தை சேர்ந்த எண்ணற்ற தொழிலாளர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் கூட வேலை செய்கின்றனர். திருப்பூர் இரயில் நிலையம் பனியன் துணி ஏற்றுமதியில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. கோவை செல்லும் அனைத்து இரயில்களும் திருப்பூர் வழியாகவே செல்கின்றன.
கோயம்புத்தூர் இல் இருந்து சென்னை செல்லும் சேரன் விரைவு வண்டி, இன்டெரசிட்டி அதிவிரைவு வண்டி, சதாப்தி அதிவிரைவு வண்டி, மேலும் பல ரெயில்கள் மாநில தலைநகரான சென்னை செல்கின்றன. மேலும் கோயம்புத்தூர் ஜெய்ப்பூர் விரைவு வண்டி, கோயம்புத்தூர் டெல்லிக்கு நிசமுத்தின் விரைவு வண்டி, மும்பை குர்லா விரைவு வண்டி என நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இங்கு இருந்து இரயில் வசதி உள்ளது.
கோவையில் இருந்து சென்னைக்கு சதாப்தி, கோவையில் இருந்து பெங்களூரு செல்ல உதய் இரண்டு அடுக்கு குளிர்சாதன வண்டி, திருவனந்தபுரம் சென்னை குளிர்சாதன வண்டி, எர்ணாகுளம் ஹௌரா அந்தியோதய, கொச்சுவேலி பணசாவாடி ஹம்சபார், கோவையில் இருந்து கும்பகோணம் ஜன் சதாப்தி, ஆகிய உயர் ரக இரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.
மேலும் கோவை இராமேஸ்வரம் வாராந்திர ரெயில், கோவை தூத்துக்குடி தினசரி ரெயில், கோவை மன்னார்குடி தினசரி ரெயில், கோவை நகர்க்கோவில் தினசரி ரெயில், சென்னை மங்களுரு தினசரி 4 ரெயில்கள் , திருநெல்வேலி தாதார் வாராந்திர ரெயில், கன்னியாகுமாரி டெல்லிக்கு கேரளா எஸ்பிரேஸ், கன்னியாகுமாரி மும்பை எஸ்பிரேஸ் என தினசரி ரெயில்கள், மேலும், பாலக்காடு ,திருச்சி, சேலம், நகர்கோயில் பயணிகள் வண்டி தினமும் இயக்கப்படுகின்றன.
திருப்பூர் இரயில் நிலையம் இருந்து புது பேருந்து நிலையம் சென்றால் கோவை, சேலம், திருச்சி, கரூர், மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் சென்றால் கோவை வழி பல்லடம், பொள்ளாச்சி, பாலக்காடு செல்ல பேருந்து வசதி உள்ளது.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையம், குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பிடம், வாகன கட்டண காப்பகம், மின்தூக்கிகள், உடல் ஊனமுற்றோர் செல்லும் வசதி என பல வசதிகள் உள்ளன. திருப்பூர் ரெயில் நிலையம் சேலம் கோட்டத்தில் இயங்குகிறது. இது ஒரு A தரம் வாய்ந்த இரயில் நிலையம் ஆகும். இங்கு சில நாட்களுக்கு முன்பு UTS செயலி மூலம் முன்பதிவு அற்ற பயண சீட்டுகளை பெரும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பல சுற்றுலா தளங்களும் உள்ளன. உடுமலை மற்றும் தாராபுரம் செல்ல பேருந்து வசதி உள்ளது. உடுமலைப்பேட்டை இருந்து மூணாறு மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செல்ல பேருந்து வசதி அதிகமாக உள்ளது. அங்கு செல்ல திருப்பூர் இரயில் நிலையம் வந்து அங்கு இருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கு இருந்து உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம், பழனி செல்ல அதிக பேருந்து உள்ளது.
No comments:
Post a Comment