போத்தனுர் ரயில் நிலையம் செல்வது எப்படி, போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய ரயில் நிலையங்களுக்கு செல்லும் வழி, ரயில் நிலைய தகவல்கள்.
போத்தனுர் ரயில் நிலையம் , சேலம் - சோரனுர் ரயில் வழி பாதையில் அமைந்துள்ளது. தொழில் நகரமான கோயம்புத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய ரயில் நிலையம் போத்தனுர் சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். போத்தனுர் ரயில் நிலையம் 5 நடைமேடை கொண்டுள்ளது, கோயம்புத்தூர் மாநகரத்தில் போத்தனுர் நகரில் அமைந்துள்ளது. போத்தனுர் ரயில் நிலையம் கோவை ரயில் நிலையம் செல்லாமல் போகும் ரயில்களில் மாற்று நிறுத்தம் ஆகும். இங்கு பெங்களூரு, மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் நின்று செல்லும் மேலும் கோவை வழியாக இயக்கப்படும் அனைத்து இரண்டாம் வகுப்பு இருக்கை கொண்ட உள்ளூர் ரயில்கள் நின்று செல்கின்றன.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து போத்தனுர் ரயில் நிலையம் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை ரயில் நிலையம் செல்ல பேருந்து என் 8 அல்லது 8A இல் ஏறி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும், பின்னர் அங்கிருந்து வலது புறம் சென்றால் கோவை மெயின் சந்திப்பு ரயில் நிலையம் சென்றடையலாம். போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் பேருந்து நிலையம் செல்ல பேருந்து என் 8 அல்லது 8A இல் பயணம் செய்யவும். இந்த பேருந்து 15 நிமிடங்களுக்கு ஒன்று இயக்கப்படுகிறது. போத்தனுர் பேருந்து நிலையத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது.
போத்தனுர் பேருந்து நிலையத்தில் இருந்து வடகோவை பேருந்து நிலையம் செல்ல 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என பேருந்து என் 4 இயக்கப்படுகிறது. இதன்மூலம் மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் பயணிகள் எளிமையாக சென்றடையலாம். போத்தனுர் புகைவண்டி நிலையத்தில் தேனீர் மற்றும் சிற்றுண்டி கடை முதல் நடைமேடையில் உள்ளது.
போத்தனுர் ரயில் நிலையம் பொள்ளாச்சி செல்லும் தொடர்வண்டிகள் செல்லும் முக்கிய பாதை ஆகும். இங்கு சமீபத்தில் தொடர்வண்டி பாதையை கடக்கும் முக்கிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தர சான்றிதல் பெற்ற ரயில்வே முன்னணி சமிக்கை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது.
சரக்கு ஏற்றி வரும் தொடர் வண்டிகள் இங்கு அதிகமாக நின்று செல்லும். இங்கு இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் அண்டை நகரங்களுக்கு நேரடி ரயில் மற்றும் பேருந்து தொடர்பு உள்ளது.
No comments:
Post a Comment